மேலும் அறிய

குஜராத்: கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு 

குஜராத்: கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு 

குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. பலர் காயமடைந்தனர். பலர் மாயமாகினர். நூறு பேர் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்து நடந்தது எப்படி? 
நேற்று மாலை 6.42 விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்னும் ஆற்றில் 100க் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம். இந்தப் பாலம் அண்மையில் தான் சீரமைக்கப்பட்டது. அக்டோபர் 26 ஆம் தேதி தான் இந்தப் பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிகழ்விடத்தில் பல்வேறு அரசுத் துறை உயரதிகாரிகளும் குவிந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "மோர்பி பால விபத்து என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திராவுக்கு பேசியுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ஷங்கவி மோர்பி பகுதிக்கு விரைந்துள்ளார். மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.

நிவாரணம் அறிவிப்பு:
இதற்கிடையில் மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து  நடந்த போது பாலத்தில் மக்கள் பலர் தொங்கிக் கொண்டிருந்த வீடியோவும், ஆற்றில் விழுந்து தத்தளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Embed widget