Corbevax: கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு Corbevax ஊசியை பூஸ்டராக கொடுக்கலாம்.. அரசு குழு பரிந்துரைப்பதாக தகவல்
முதன்மை தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு மாற்றாக மற்றொரு தடுப்பூசி பூஸ்டராக அனுமதிக்கப்படுவது இதுவே முதன்முறை.
புதுடெல்லி: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் மூலம் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக பயோலாஜிக்கல் கார்பெவாக்ஸ் எனும் மருந்தை அனுமதிக்க கோவிட் நோய்த்தடுப்பு குறித்த அரசாங்க குழு பரிந்துரைத்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பயாலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கியுள்ள "கார்பெவாக்ஸ்" தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த முன்னதாக அனுமதி கோரப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசிக்குப் பிறகு, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது தடுப்பூசி, "கார்பெவாக்ஸ்" ஆகும்.
முதன்மை தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு மாற்றாக மற்றொரு தடுப்பூசி பூஸ்டராக அனுமதிக்கப்படுவது இதுவே முதன்முறை. தற்போது 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கார்பெவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
View this post on Instagram
இந்நிலையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) கொரோனா பணிக்குழு, ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற 48ஆவது கூட்டத்தில் இந்த பரிந்துரையை வழங்கியதாக அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ”18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு முதன்மை தடுப்பூசியான கோவாக்சின் / கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, கார்பெவாக்ஸ் முன்னெச்சரிக்கை டோஸாகப் பரிசீலிக்கப்படலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 18 - 80 வயதுக்குட்பட்டோரில் முதல் இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களிடையே இந்த பூஸ்டர் டோஸ் அளித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கார்பெவெக்ஸ் தடுப்பூசி, கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும்போது ஆன்டிபாடிக்கள் கணிசமான அதிகரிப்பது கண்டறியப்பட்டது.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Corbevax மருந்தை கடந்த ஜூன் 4-ஆம் தேதி இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் (DCGI) அங்கீகரித்தது.
தற்போது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களில் பயன்படுத்தப்படும் அதே கொரோனா தடுப்பூசியே முன்னெச்சரிக்கை மருந்தாக வழங்கப்படுகிறது.
18-59 வயதுப் பிரிவினருக்கு 4.13 கோடிக்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும், சுகாதார, முன்களப் பணியாளர்களுக்கும் 5.11 கோடிக்கும் அதிகமான முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் 12-14 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்