மேலும் அறிய

APJ Abdul Kalam: இந்தியாவின் கனவு நாயகன்.. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவு நாள் இன்று..!

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

பொருளாதார ரீதியாக பின் தங்கிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தீவு நகரமான இராமேஸ்வரத்தில் பிறந்தார். அங்குள்ள  தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கிய அவர், பள்ளிக்காலத்திலேயே குடும்பத்தின் நிலை கருதி, பேப்பர் போடுவது என பணிகளை மேற்கொண்டு வந்தார். 

திருச்சியில் உள்ள  செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்த அப்துல் கலாம், 1955 ஆம் ஆண்டு சென்னை எம்.ஐ.டி விண்வெளி பொறியியல் படிப்பு படித்தார். பின்னர் அதில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO)பணியாற்றினார். இந்திய விண்வெளித் துறையின் மைல் கல்லாக உள்ள அக்னி-1 திட்டத்திற்கு வித்திட்டார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கலாமின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் ரோகினி செயற்கைக்கோள் ஏவப்பட்டதில் கலாமின் பங்கு முக்கியமானது. இதற்காக அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.  1999 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ள அப்துல்கலாம் 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பதிவியேற்றார். 

குடியரசு தலைவராவதற்கு முன் அப்துல்கலாமுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மக்களின் ஜனாதிபதி என அன்பாக அழைக்கப்பட்ட அப்துல் கலாம் 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். இப்படியான நிலையில் அப்துல் கலாம் இளைஞர்களின் கனவு நாயகனாக திகழ்ந்தார். ”கனவு காணுங்கள் உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் லட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்  என இளம் தலைமுறையினரை தட்டி எழுப்பியவர் அப்துல்கலாம். கனவு என்பது உறங்கும் போது காண்பதல்ல.. மாறாக உன்னை  உறங்கவிடாமல் செய்வதே அந்த கனவு” என உத்வேகம் ஊட்டினார்.

அக்னி சிறகுகள், இந்தியா 2020 உள்ளிட்ட அவரின் புத்தகங்கள் இன்றும் இளம் தலைமுறையினரால் வாசிக்கப்படுகிறது. அப்துல்கலாம் தமிழ்நாட்டின் பெருமையாக கருதப்படுகிறார். அவர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரின் மரணம் உலகமெங்கும் உள்ள இந்திய மக்களை அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல்  சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது.  இன்றும் ராமேஸ்வரம் செல்லும் மக்கள் மறக்காமல் அப்துல்கலாமின் நினைவிடம் சென்று வருகிறார்கள்.

காலம் உள்ள வரை நம் அனைவரின் மனதிலும் அப்துல்கலாம் இருப்பார் என்பதே உண்மை..!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் கூட இல்லை... மீண்டும் உயிர்ப்புடன் தென்பட்ட அரிய வனவிலங்கு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
ஆயிரத்தில் கூட இல்லை... மீண்டும் உயிர்ப்புடன் தென்பட்ட அரிய வனவிலங்கு: வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! வாடகை கார் தொழில் தொடங்க புதிய விதிகள்!
கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! வாடகை கார் தொழில் தொடங்க புதிய விதிகள்!
சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு! தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு!
சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு! தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு!
சபரிமலைக்கு அனுப்ப வேண்டிய மில்மா நெய் கடத்தல் ! தமிழக வியாபாரிகள் இருவர் கைது!
சபரிமலைக்கு அனுப்ப வேண்டிய மில்மா நெய் கடத்தல் ! தமிழக வியாபாரிகள் இருவர் கைது!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Crime: 22 வயது இளைஞருடன் காதல்..! கணவனின் தலையை துளைத்த தோட்டா - மனைவியின் பலே ப்ளான்
22 வயது இளைஞருடன் காதல்..! கணவனின் தலையை துளைத்த தோட்டா - மனைவியின் பலே ப்ளான்
Mohit Ulva :
Mohit Ulva :"கல்வெட்டால பொறிக்குற மாதிரி ஒரு பேட்டிங்.." பாகிஸ்தானை தனி ஆளாக பந்தாடிய மோகித்!
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
Embed widget