Sanjiv Bhatt : 2002 குஜராத் கலவர வழக்கு : முன்னாள் ஐபிஎஸ் சஞ்சீவ் பட் மீண்டும் கைது..
2002 குஜராத் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ஐபிஎஸ் சஞ்சீவ் பட்டை குஜராத் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது.
2002 குஜராத் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ஐபிஎஸ் சஞ்சீவ் பட்டை குஜராத் காவல்துறை மீண்டும் கைது செய்துள்ளது.
2002 குஜராத் கலவரம்:
2002ம் ஆண்டு பிரதமர் மோடி அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில், இந்து மற்றும் முஸ்லீம்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் அரங்கேறியபோது சஞ்சிவ் பட் ஐபிஎஸ் குஜராத் உளவுத்துறையில் துணை கமிஷனராகவும் உள்நாட்டு பாதுகாப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பழிவாங்கும் வன்முறையைத் தூண்டும் என்று முதலில் தெரிவித்த அதிகாரிகளில் சஞ்சீவ் பட்டும் ஒருவர்.
சஞ்சய் பட் ஐபிஎஸ்:
அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி, 72 மணிநேரத்திற்கு “இஸ்லாமியர்களுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தட்டும்” என்று காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இரவு கூறியதாக சஞ்சீவ் பட் வாக்குமூலம் அளித்தார். அதேநேரத்தில் சிறப்பு விசாரணைக் குழு மோடியையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் காப்பாற்ற நினைப்பதாக உச்சநீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார்.
சஞ்சய் பட் மீது குற்றச்சாட்டு:
எனினும் இவரது குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். கடந்த 2015ம் ஆண்டு சஞ்சீவ் பட் காவல்துறை சேவையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, குஜராத் அரசு அவர் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணையை சந்திக்க நேர்ந்தது. நீதிமன்ற தீர்ப்பில் சஞ்சீவ் பட் அரசியல் சதியில் ஈடுபட்டதாகவும், சில என்ஜிஓக்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதனால்தான் அவர் அரசியல் அழுத்தத்தை உருவாக்குவதில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. அதோடு, 1990ம் ஆண்டில் பிரபுதாஸ் வைஷ்ணவி கொடுமைபடுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கிலும் சஞ்சய் பட் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மீண்டும் கைது:
தற்போது பனஸ்கந்தா சிறையில் இருந்து வரும் சஞ்சய் பட், குஜராத் கலவர வழக்கில் நிதியை அபகரித்ததாகவும், ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும் கூறி கடந்த ஜூலை 12ம் தேதி குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர். அகமதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு 14 நாள்கள் விசாரணைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 20ம் தேதி அதிகாலை 5 மணி வரை விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
மூன்று பேர் கைது:
குஜராத் கலவர வழக்கில் தொடர்புடையவர்களை, குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க ஆதாரங்களை திரித்து சதிச்செயலில் ஈடுபட்டதாக, செய்தியாளர் டீஸ்டா சீதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்பி ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சய் பட் ஆகியோர் மீது கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.