கொரோனா தடுப்பூசி திருவிழா - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்
நான்கு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் தடுப்பு மருந்துகளை வீணாக்கக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, நாடு முழுவதும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நான்கு நாட்களும் அதிகம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி திருவிழா தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ளவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சைக்குப் பணமில்லாமலும், அதுகுறித்து அறியாமலும் இருப்பவர்களின் சிகிச்சைக்கு உதவ வேண்டும். ஒவ்வொருவரும் தானும் முக கவசம் அணிவதுடன் மற்றவரையும் அணியச் செய்ய வேண்டும். நான்கு நாள் தடுப்பூசி திருவிழாவில் தடுப்பு மருந்துகளை வீணாக்கக் கூடாது” என்று கூறினார்.