மேலும் அறிய

Fire Accident: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... மருத்துவர் உட்பட 5 பேர் உடல் கருகி மரணம் - நடந்தது என்ன?

ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் புரானா பஜார் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையுடன் கூடிய நர்சிங் ஹோம்  ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்டோர் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்துவர்கள் அலறியடித்து ஓட முயன்றனர். இந்த தீயானாது மெல்ல மெல்ல பரவி மருத்துவமனையின் 2வது மாடியை சூழ்ந்து கொண்டது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி பிரேமா ஹஸ்ரா, உரிமையாளரின் மருமகன் சோஹன் கமாரி, வீட்டு பெண் தாரா தேவி ஆகியோர் தீ விபத்தில் மூச்சு திணறி இறந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் தெரிந்து, சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  மேலும் அங்கு இருந்த 9 பேரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜார்க்கண்ட் முதல்வர் இரங்கல்

தன்பாத்தில் உள்ள மருத்துவனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, "தன்பாத்தில் உள்ள  மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதிகளான விகாஸ் மற்றும் டாக்டர் பிரேமா ஹஸ்ரா உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர்களை இழந்தும் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget