Voter ID Card : 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
முன்னதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்றாக வாக்காளர் அடையாள அட்டை திகழ்கிறது. இது இந்திய குடிமகனுக்கான அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. முன்னதாக வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதேபோல் தேர்தல் நெருங்கும் சமயங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அதேசமயம் வாக்காளர் அடையாளர் அட்டை விண்ணப்பித்து கிடைக்கப் பெறாதவர்கள் 11 வகையான ஆவணங்களை கொண்டு வாக்களிக்கும் நடைமுறை இருந்து வந்தது.
Youngsters above 17 years of age can now apply in advance for having their names enrolled in Voter’s list and not necessarily have to await the pre-requisite criterion of attaining the age of 18 years on 1st January of a year: ECI pic.twitter.com/DhAi7NN1Zo
— ANI (@ANI) July 28, 2022
இந்நிலையில் இனி வாக்காளர் அடையாள அட்டை பெற 18 வயது வரை காத்திருக்க தேவையில்லை எனவும், 17 வயது நிரம்பியவர்களும் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலுல் 17 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டங்களில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் இனிமேல் ஆண்டுக்கு 4 முறை நடக்கும் என்றும், ஜனவரி, ஏப்ரல்,ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 1 ஆம் தேதி பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்