வந்தது ரகசிய தகவல்.. பெங்களூரு ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த அதிகாரிகள்.. சிக்கிய கோகைன்
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் சோதனை மேற்கொண்டதில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தோஹாவிலிருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் சோதனை மேற்கொண்டதில் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தது ரகசிய தகவல்:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
பெங்களூரு ஏர்போர்ட்டில் மடக்கி பிடித்த அதிகாரிகள்:
அவரது உடைமைகளைப் பரிசோதித்தபோது, அவர் மறைத்து வைத்து எடுத்து வந்த வெள்ளைப் பொடி ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்தப் பொடியில் கோகைன் போதைப் பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Officers of Directorate of Revenue Intelligence (DRI) Bengaluru Zonal Unit intercepted an Indian male passenger, who arrived from Doha at Bengaluru International Airport yesterday. The pax was carrying two superhero comics/ magazines which were unusually heavy. The officers… pic.twitter.com/s3YI06ZEas
— ANI (@ANI) July 19, 2025
மீட்கப்பட்ட கோகைன், 4,006 கிராம் (4 கிலோவுக்கு மேல்) எடையும், சர்வதேச சந்தையில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பும் கொண்டது. அது பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அந்தப் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் முதல், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் மிசோரமில் ₹ 72 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன், ஹெராயின் ஆகிய போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து ஏழு பேரைக் கைது செய்துள்ளது.
இதற்கு முன்பு, மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.






















