ABHYAS: எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் அபியாஸ்.. சிறப்பம்சம் என்ன?
வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் "அபியாஸ்" விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் "அபியாஸ்" விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, அதன் வானூர்தி வளர்ச்சி ஸ்தாபனத்தால் 'அபியாஸ்' வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் சோதனை ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 2 ஆம் தேதி வரை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
Four flight trials of High Speed Expendable Aerial Target-ABHYAS with different mission objectives in a revised robust configuration using single booster was successfully conducted from ITR, Chandipur during 30 Jan to 02 Feb 2024. @DefenceMinIndia @SpokespersonMoD pic.twitter.com/p7BtEz5SsQ
— DRDO (@DRDO_India) February 5, 2024
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அபியாஸ் காண்பதற்கு சிறிய ரக விமானம்போல இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபியாஸ் எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் இந்த விமானத்தின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அதிக சூழ்ச்சித்திறன் உட்பட, பல விஷயங்கள் சோதனை செய்யப்பட்டன.
இது தொடர்பான செய்தி வெளியீட்டு குறிப்பில், “ ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை, வானில் உள்ள இலக்குகளை அழிக்கவல்ல அதிவேக 'அபியாஸ்' விமானத்தின் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
பூஸ்டரை பாதுகாப்பாக விடுவித்தல், ஏவுகணையை செலுத்துதல், திட்டமிட்ட விமான வேகத்தை அடைதல் போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த விமானத்தை டி.ஆர்.டி.ஓ வின் ஏடிஇ நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆட்டோ பைலட்டின் உதவியுடன் தானியங்கி பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அபியாஸ் விமானத்தின் வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை, ஆயுதப்படைகள் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் வளர்ச்சி ஆயுதப் படைகளுக்கான வான்வழி இலக்குகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றில் தொடர்புடைய குழுக்களின் முயற்சிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் பாராட்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.