மேலும் அறிய

Pawan Kalyan: ப்ளீஸ் விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க.. டார்ச்சர் செய்த ஆதரவாளர்கள்.. பவன் கல்யாண் கோரிக்கை!

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் அந்த சம்பவம் பவன் கல்யாணுக்கு சோகமாக அமைந்துள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என ஆந்திரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் அந்த சம்பவம் பவன் கல்யாணுக்கு சோகமாக அமைந்துள்ளது.  ஆந்திரப்பிரதேச மாநிலம் மங்களக்கிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன் கட்சி தொண்டர்களிடையே பவன் கல்யாண் பேசினார். அப்போது மக்கள் தனக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் சகோதரரான நடிகர் சிரஞ்சீவி, விஜயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் பவன் கல்யாணின் கருத்து சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

பவன் கல்யாண் பேசும்போது, “தமிழ்நாடு தேர்தல் நடந்து அவர் (விஜய் பெயரை குறிப்பிடாமல்) முதலமைச்சரானதிலிருந்து, மக்கள் எனக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். நமது அண்டை மாநிலத்தில், ஒரு நடிகர் கட்சியைத் தொடங்கி முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு ஆந்திரப் பிரதேசத்திலும் நான் அதையே செய்திருக்க வேண்டும் என்று பலர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது பக்கத்து வீட்டுத் திருமணத்திற்கு ஏதோ நம் வீட்டில் நிகழ்ச்சி நடப்பது போல எதுவும் அறியாமல் குழந்தைகள் ஓடித் திரிவதை போல இருக்கிறது. 

காரணம் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் நிலைமை வேறாக உள்ளது. நான் 2019 தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது அமைச்சர்கள் கூட எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. இந்த அனுபவம்தான், எனது பாதையை விஜய்யின் சமீபத்திய வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாததாக ஆக்குகிறது எனவும் பவன் கல்யாண் விளக்கமளித்தார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த பவன் கல்யாண் 2014ம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். 2014ம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாமல் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவின் கூட்டணிக்கு ஆதரவுன் தெரிவித்தது. இதன்பின்னர் 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜனசேனா கட்சியானது பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து களம் கண்டது. ஜன சேனா கட்சி 140 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் தான் வெல்ல முடிந்தது. பவன் கல்யாண் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

2024 சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக கூட்டணியில் ஜனசேனாவும் இடம்பெற்றது. இதில் 21 இடங்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது. கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் ஜெயித்தார். இந்த நிலையில் பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget