மேலும் அறிய

இதான் பிரச்னை! அதிக டிக்கெட் வித்தது ஏன்? டெல்லி கூட்ட நெரிசல்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட நீதிபதி!

கூட்ட நெரிசல் ஏற்பட்ட தினத்தன்று டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளின் அளவை விட அதிக எண்ணிக்கையில் ரயில் டிக்கெட்கள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

டெல்லி ரயில் நிலையத்தில், கடந்த 15ஆம் தேதி இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்காக விடப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக மக்கள் காத்திருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது.

டெல்லி கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

அதற்கு முக்கிய காரணமாக பிரயாக்ராஜ் செல்லும் இரண்டு ரயில்களின் பெயர்களில் ஏற்பட்ட குழப்பம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரயில்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடும்போது சரியான பெயர்களை குறிப்பிடவில்லை என்றும் இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

சம்பவ தினத்தன்று ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளின் அளவை விட அதிக எண்ணிக்கையில் ரயில் டிக்கெட்கள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட கோச்சில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ரயில்வே விதியே உள்ளது.

நீதிபதிகள் சரமாரி கேள்வி:

இதை மீறி ரயில்வே டிக்கெட்கள் விற்கப்பட்டதாகவும் இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என டெல்லி ரயில் நிலையத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசின் மீதும் இந்தியன் ரயில்வே மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

"ரயில் பெட்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற சட்டத்தையும் அதிகாரம் இல்லாமல் நுழையும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் தற்போதைய சட்டத்தையும் செயல்படுத்த நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க போகிறீர்கள்.

(ரயில்வே சட்டத்தின்) தொடர்புடைய பிரிவுகளைப் பார்த்தால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. இந்த எண்ணிக்கை பெட்டிக்கு வெளியே தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஒரு எளிய விஷயத்தை நேர்மறையான முறையில்... எழுத்துப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும்... செயல்படுத்தியிருந்தால், இந்த சூழ்நிலையை (டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல்) தவிர்த்திருக்கலாம்.

"அவசர நாட்களில்" ரயில்வே அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற விதி சம்பவ தினத்தன்று புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஏன் பெர்த்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது? இதுதான் பிரச்சனை" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget