வீட்டில் இருந்து மாயமான 16 வயது சிறுமி! கேமிங் ஆப் மூலமாக கண்டுபிடித்த போலீஸ்! நடந்தது என்ன?
டெல்லியில் மாயமாகிய 16 வயது சிறுமியை கேமிங் ஆப் மூலமாக போலீசார் கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் அமைந்துள்ளது சாணக்கியபூரி. இந்த பகுதிக்கு அருகே 16 வயது சிறுமி தன்னுடைய பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த 16 வயது சிறுமி பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், பள்ளி மாணவியான அந்த சிறுமிக்கும் அவருடைய தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தாய் திட்டியதால் கோபித்துக்கொண்ட சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளிச்சிறுமி கோபித்துக்கொண்ட சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கையில் செல்போன் உள்பட எந்த தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச்செல்லவில்லை. மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில், போலீசாருக்கு மாணவி செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
மாணவியுடன் செல்போனில் ஆன்லைன் கேம் நண்பர்களாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசார் விசாரித்தனர். போலீசார் விசாரணையில் மாணவியை பற்றிய தகவல் அந்த மாணவியுடன் ஆன்லைன் கேம் விளையாடும் ராஜஸ்தானைச் சேர்ந்த நண்பர் ஒருவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து, அவரை போலீசார் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அந்த 16 வயது சிறுமி வீட்டில் இருந்து ஆட்டோ மூலமாக சரோஜினி மார்க்கெட்டிற்கு கடைசியாக சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்று போலீசார் தேடியபோது மாணவியை காணவில்லை. இருப்பினும், அந்த பள்ளி மாணவியே புதிய எண்ணில் இருந்து தனது நண்பரை அழைத்துள்ளார். அப்போது, அவர் குருத்வாவில் இருப்பதாக கூறியுள்ளார். உடனடியாக அந்த இடத்திற்கு சென்ற போலீசார் பள்ளி மாணவியை கண்டுபிடித்து மீட்டனர். பின்னர், மாணவிக்கு அறிவுரை கூறி அவரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
ஆன்லைன் கேம் மூலமாக காணாமல் போன பள்ளி மாணவியை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க : ''விவாகரத்து வேண்டாம்..சேர்ந்தே வாழ்றோம்'' - நீதிமன்றத்தில் மனம் மாறிய 120 தம்பதிகள்! சாதித்த லோக் அதாலத்!
மேலும் படிக்க : Crime : உடலுறவுக்கு மறுப்பு.. எப்போதும் செல்போன்! மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்