Supreme Court: மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியில் அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் டெல்லி அரசுக்கு உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா? துணை நிலை ஆளுநருக்கு உள்ளதா என மோதல் எழுந்தது. டெல்லி யூனியன் பிரதேசன் என்பதால் இந்த மோதல் போக்கு நீடித்த நிலையில் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த நிலையில் உச்ச நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பித்தக்கது. இந்த வழக்கு இந்திய கூட்டாட்சியின் மாதிரி என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. ஜனநாயகம், கூட்டாட்சி கொள்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதிகாரிகளை நியமிக்கும் உரிமை அரசிற்கே உண்டு என்ற அதிரடி தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
நிலம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைத் தவிர சேவைகள் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், "மாநிலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டது என்றாலும், மாநிலங்களின் நிர்வாகத்தை மத்திய அரசு கையகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
தமிழக அமைச்சரவையை மாற்றியது ஏன்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்