Hardik Pandya Instagram : இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்: யார் தெரியுமா?
Hardik Pandya Instagram : ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட இளம் இந்திய கிரிகெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட இளம் இந்திய கிரிகெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் பிந்தொடர்பவர்களை கொண்டுள்ள இளம் இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் டி20 அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
ஹர்திக் இரண்டாமிடம்
மொட்டேராவில் நியூசிலாந்துக்கு எதிராக நியூ பாலில் சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். அதுமட்டுமின்றி நான்கு ஓவர்களில் 4/16 என்ற கணக்கில் பந்து வீசி தனது கரியரின் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இந்த சிறப்பான பங்களிப்பின் பலனாக டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது நபியை பின்னுக்கு தள்ளி, பாண்டியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் உள்ள வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹாசனை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ளார். ஆனால் அடுத்த டி20 போட்டியில் இந்திய விளையாட ஒன்றரை மாதம் ஆகும் என்பதால், ஷகிப் சோதப்பினாலே ஒழிய, இப்போதைக்கு முதலிடம் செல்ல பெரிய வாய்ப்புகள் இல்லை.
எனது வாழ்க்கைக்கும் கேப்டன்சிக்கும் ஒரே ஒரு மிகவும் எளிமையான விதி வைத்துள்ளேன் - நான் கீழே சென்றால், எனது முடிவுகளில் கீழே இறங்கிவருவேன். நான் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடியபோது, இரண்டாவது இன்னிங்ஸ் கடினமானதாக உணர்ந்தேன். இதுபோன்ற ப்ரஷரான சூழ்நிலைகளை நாங்கள் இயல்பாக மாற்ற விரும்புகிறோம், அதன்மூலம் பெரிய போட்டிகளில் நாம் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்" என்று ஹர்திக் பாண்டியா மனம் திறந்திருந்தார்.
2022 ஆம் ஆண்டில், ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு, பேட்டின் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாடினார். மொத்தம் 607 ரன்களும் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து இந்தியா சிறந்த ஸ்கோரை எட்ட உதவினார். ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
View this post on Instagram
ரசிகர்களுக்கு நன்றி:
ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருகிறார். 25 மில்லியன் ஃபாலோயர்களை கடந்திருக்கும் ஹர்திக் தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு நன்றி தெரிவிட்துள்ளார்.
அதில்,” உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.தொடர்ந்து ஆதரவளிக்கும் உங்களுக்கு நன்றியும், அன்பும்.. என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது மனைவிக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு, 25 கேள்விகளைக் கேளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா- நடாஷா இணையருக்கு அகஸ்தியா என்ற குழந்தை உள்ளது.