மோசமான சூழலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கவேண்டும் - மத்திய அரசு..
கொரோனாவின் மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கொரோனாவின் மோசமான சூழலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்கவேண்டும். மக்களை அச்சுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. நாட்டின் உண்மையான நிலையே அதுதான் என மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவின் மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த கூற்றுக்கு சில மணிநேரம் முன்னதாக, தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த 20 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்த கொடுமை ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் நடந்துள்ளது. சனிக்கிழமை காலையும் கூட 45 நிமிடங்களுக்குத்தான் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு இருந்துள்ளது. டெல்லி அரசின் உதவியைக் கேட்டு போராடி வருகின்றனர் மருத்துவமனை நிர்வாகிகள். ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பலூஜா முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு இருக்கும் நிலவரத்தைச் சுட்டிக்காட்டி கூறுகையில், ”20 தீவிர கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் கையிருப்பு முற்றிலும் இல்லாமல் போகவில்லை, ஆனால் குறைந்த அழுத்த ஆக்சிஜனே இருந்தது. போதவில்லை” என்றார்.