Bharat Jodo Yatra: பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவில் 21 கட்சிகளுக்கு அழைப்பு.. கடிதம் அனுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே..
நடைப்பயணம் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
நடைப்பயணம் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்போது பஞ்சாபில் நுழைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் நடந்துள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது.
Bharat Jodo yatra completed 3300 km as of today. 👏🏻🙏🏻
— Naveen _Pettem (@PettemINC) January 11, 2023
If not @INCIndia no party will ever dare to talk to the public & understand the problems they are facing. Congratulations to @RahulGandhi & all leaders for doing the padayatra in the hot sun, ceaseless rains & foggy winters. pic.twitter.com/A3riOlfcSG
இந்தநிலையில், நடைப்பயணம் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் நடைப்பயணம் தொடங்கியதில் இருந்தே ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். ராகுல்காந்தி அழைப்பின்பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி இந்த நிறைவு விழா நடைபெற உள்ளது.
நாட்டில் உள்ள வெறுப்புவாதம், வன்முறை பற்றி குரல் கொடுக்கும் வகையில் இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீங்கள் பங்கேற்றால், யாத்திரையின் நோக்கத்ததுக்கு வலு சேர்ப்பதாக அமையும். நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று, நாடு பொருளாதார, சமூக, அரசியல் சிக்கலை சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கானோரை யாத்திரை இணைக்கிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். அன்று தொடங்கிய பயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களை கடந்து நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் இவ்வளவு நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டதில்லை என்றும் இதுவே மிக நீண்ட நடைப்பயணம் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும் யாத்திரைக்குப் பிறகு, இந்த பயணத்தின் நோக்கத்தை அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்வதற்காக 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும்.