![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Tamilnadu MP'S WalkOut RajyaSabha: முடியவே முடியாது.. மாநிலங்களவையை அலறவிட்ட தமிழக எம்.பிக்கள்.. அடக்கிய வெங்கையா நாயுடு..
நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக எம்.பிக்கள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
![Tamilnadu MP'S WalkOut RajyaSabha: முடியவே முடியாது.. மாநிலங்களவையை அலறவிட்ட தமிழக எம்.பிக்கள்.. அடக்கிய வெங்கையா நாயுடு.. Congress, DMK, and TMC stage walkout from Rajya Sabha following sloganeering over Tamil Nadu Governor returning the Bill Issue Tamilnadu MP'S WalkOut RajyaSabha: முடியவே முடியாது.. மாநிலங்களவையை அலறவிட்ட தமிழக எம்.பிக்கள்.. அடக்கிய வெங்கையா நாயுடு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/6cd3ff3a41ec3b8b7224c5329e1b55c0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ஜீரோ ஹவர் நேரத்தில் பேசுவதற்கு பேர் கொடுத்தவர்களை பேசுவதற்காக துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச அழைத்தார். இதற்கிடையே திமுக எம்.பிக்கள் மற்றும் தோழமை கட்சிகள் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதனை கேள்வி நேரத்தின்போது அனுமதிக்க முடியாது எனவும் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தின் போது பேசுங்கள் எனவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
அப்போது “ஒரு மாநில சட்டமன்றம் அனுப்பக்கூடிய மசோதாவை ஒரு ஆளுநர் எப்படி திருப்பி அனுப்ப முடியும்” என திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். ஆனால் ஆளுநர் விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க முடியாது என்று வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)