Vice President:பருவநிலை மாற்றம் என்பது மனித குலத்தைப் பாதிக்கும் டைம் பாம் : குடியரசு துணைத் தலைவர்
VP Jagdeep dhankhar: பருவநிலை மாற்றம் என்பது நலிந்த பிரிவினரைத் தான் பெரிதும் பாதிக்கும் என்பதால் பருவநிலை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிரி எரிசக்தி குறித்த நான்காவது சர்வதேச பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்பது உணர்ச்சிபூர்வமானது மட்டுமின்றி, ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்றார். பருவநிலை மாற்றம் என்பது நலிந்த பிரிவினரைத் தான் பெரிதும் பாதிக்கும் என்பதால் பருவநிலை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
நல்லிணக்கத்துடன், இயற்கையுடன் இணைந்து வாழ்வது பாரதத்தின் நாகரீக வெளிப்பாடு என்று குறிப்பிட்ட அவர், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி செயல்பாட்டுக்கும், நீடித்த எரிசக்தி தொடர்பான உலகளாவிய தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தார்.
Our planet, once a pristine green heaven, is not a shade of its past. Bled by climate change, triggered by reckless exploitation of natural resources and deforestation, the planet has been brought near catastrophe.
— Vice-President of India (@VPIndia) July 19, 2024
Humanity is cliff-hanging. The balloon of #climatechange is… pic.twitter.com/NFjFuvD9E1
எனவே பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட அனைவரும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஜக்தீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.