மேலும் அறிய

Chandrababu Naidu: என்னை கொல்ல முயற்சி நடக்கிறது; சி.பி.ஐ. விசாரணை தேவை - சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார்!

Chandrababu Naidu: என்னை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஆனால், என் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு சித்தூர் தாக்குதல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 விஜயநகரம் பகுதியில் செய்தியாளர்களை சந்த்தித்த சந்திரபாபு நாயுடு, “என்னை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஆனால், என் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எனது பாதுகாவலர்கள், மீடியா மற்றும் பொதுமக்களே இதற்கு சாட்சி. என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம்.” என்று தெரிவித்து சித்தூர் மாவட்டத்தில் நடந்த பேரணியின் வீடியோவை செய்தியாளர்களிடம் காண்பித்தார். 

” எங்கள் கட்சியினர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து தேர்தல் சமயத்தில் அதை அவர்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு பார்க்கிறார்கள். நான் மக்களிடையே செல்ல கூடாது என்பதற்காகவே என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீது கல்வீசி தாக்குதல் நடந்தாலும், அங்கு வெறும் பார்வையாளர்களை போல காவல் துறையினர் இருக்கின்றனர்.  ஒரு எதிர் கட்சி தலைவர் வரும்போது, அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் கூட்டமாக வரவேண்டிய அவசியம் என்ன? என்று ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றாசாட்டுகளை முன்வைத்தார். 

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறிட்டதாகக் கூறி அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில்  சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ரோட் ஷோ-வில் பங்கேற்றார். அப்போது அன்னமய மாவட்டம் தம்பல்லப்பள்ளி தொகுதிக்குட்பட்ட அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டுருந்தபோது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை தூண்டிவிட்டு சந்திரபாபு பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க சென்ற காவல்துறையினரை அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு,காவல் துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு அன்னமயா மாவட்டம் புரபாலகோட்டா பகுதிக்கு சென்றபோது ஆளும் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயம்டைந்தனர். மேலும், காவல் துறை வாகனங்கள், ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன.

அதுபோல சித்தூர் மாவட்ட புங்கனூர் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அங்கல்லு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உமாபதி ரெட்டி என்பவா் அளித்த புகாரில், முடிவீடு பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120 பி, 147, 153, 307, 115, 109, 323, 324, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு பெயா் சோ்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கங்காதர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவா்கள் தேவினேனி உமா, அமரநாத ரெட்டி, ராம்கோபால் ரெட்டி உள்ளிட்டோா் பெயா்களும் இடம்பெற்றுள்ளதாக அவா் தெரிவித்தாா்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget