மேலும் அறிய

Mamata Banerjee | "நான் ஒன்றும் காலடி நாயில்லை” : மம்தா பானர்ஜியை கொல்ல சதி.. பேராசிரியர் மீது வழக்கு

”நான் இன்னும் அவரை கொல்ல விரும்புகிறேன். நான் ஒன்றும் அவர்களின் காலடி நாய் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நான் எதிரானவன்”...

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைக் கொன்றுவிடுவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்ததாக கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலீசில் புகார் அளித்த முனைவர்:

தமல் தத்தா என்ற முனைவர் அளித்த புகாரின் அடிப்படையில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராக பணிபுரியும் அரிந்தம் பட்டாச்சார்யா மீது ஹேர் ஸ்ட்ரீட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

தமல் தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் விலங்கியல் பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா மீது பொது மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் நடந்துகொள்வது, கொலை அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துவேன் என மிரட்டுவது, குற்றச்செயலுக்கு சதித்திட்டம் தீட்டுவதும் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையர் முரளிதர் சர்மா கூறி உள்ளார்.

பேராசிரியரியரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்:

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சாரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை இன்னும் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Mamata Banerjee |

அப்படி என்ன பேசினார் பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா?

பேஸ்புக் மெசஞ்சரில் அரிந்தம் பட்டாச்சாரியாவிடம் அவரது நண்பர் ”மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன் முதலமைச்சர் கொலை செய்வேன் என்று நீங்கள் வாட்ஸ் அப் குழுவில் சொன்னீர்கள். ஆனால், இப்போது உங்களை காப்பாற்றிக்கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டிற்கு சென்றுள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பதில் அளித்த பட்டாச்சார்யா “நான் இன்னும் கூட அவரை கொல்ல விரும்புகிறேன். நான் ஒன்றும் அவர்களின் காலடி நாய் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நான் எதிரானவன்” என பதிலளித்து உள்ளார்.

கொலை மிரட்டல் புகாருக்கு பேராசிரியர் மறுப்பு:

இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ள பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா, தன் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். ​​"இது எனக்கும், என் நண்பருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல். நான் பொதுவெளியில் தெளிவாக கொலை மிரட்டல் விடுக்கவில்லை. முதலமைச்சருக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. புகார் கொடுத்த முனைவர் தமல் தத்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர். என் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் இது குறித்து சட்ட ஆலோசனை பெற இருக்கிறேன்.” என்றார்.

பட்டாச்சார்யாவின் பேராசிரியர் பணிக்கு ஆபத்து:

மம்தா பானர்ஜிக்கு பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா கொலை மிரட்டல் விடுத்ததற்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மேற்கு வங்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. 17 ஆண்டுகளாக விலங்கியல் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வரும் அரிந்தம் பட்டாச்சார்யாவின் பணியும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 2012-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ரா, மேற்கு வங்க முதல்வரை விளக்குகிறார் என்று கார்ட்டூன் அனுப்பியதாக கைது செய்யப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget