பெங்களூருவில் 'ஷேர் டாக்ஸி'க்கு தடையா? - கர்நாடக அமைச்சர் பரபரப்பு விளக்கம்
ஷேர் டாக்ஸி' முயையும் போக்குவரத்து நெரிசலை சற்று குறைக்கும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இச்சூழலில், பெங்களூருவில் 'ஷேர் டாக்ஸி' முறைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியான இருக்கிறது.
நாம் நினைத்து பாரக்க முடியாத அளவுக்கு நகரமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து வெளியேறி நகர்ப்புறங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நகரங்கள் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையை தொடர்ந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன. நாட்டின் முக்கிய நிறுவனங்கள் இங்குதான் அமைந்துள்ளன. எனவே, நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் கார்களை பயன்படுத்துவதே பெங்களூரு போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
'ஷேர் டாக்ஸி' முறைக்கு தடையா?
கார்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நிபுணர்கள் தீர்வு கூறி வருகின்றனர். அதேபோல, 'ஷேர் டாக்ஸி' முயையும் போக்குவரத்து நெரிசலை சற்று குறைக்கும் என நிபுணர்கள் கூறிவருகின்றனர். இச்சூழலில், பெங்களூருவில் 'ஷேர் டாக்ஸி' முறைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியான இருந்தது.
டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 'ஷேர் டாக்ஸி' முறைக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "ஷேர் டாக்ஸிக்கு தடை விதிக்கவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்:
செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், "தடை செய்துவிட்டதாக யார் சொன்னது? ஆவணத்தைக் காட்டு. செயலிகள் வழியாக புக் செய்யப்படும் ஷேர் டாக்சி சேவைகள் இயங்குகின்றன. ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து ஆலோசிக்க ஷேர் டாக்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் மாநில அரசு ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது.
வர்த்தகம் சாராத தனியார் வாகனங்களில் வெள்ளை நம்பர் பிளேட் போட்டு ஷேர் டாக்சியாக பயன்படுத்துவதே சட்ட விரோதம். வணிக நோக்கங்களுக்காக வெள்ளை நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்த முடியாது. மஞ்சள் நிற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தலாம்" என்றார்.
இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, "மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட வணிக வாகனத்தில் ஷேர் டாக்சி முறையை அனுமதிப்பார்கள். ஆனால், வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தில் அனுமதிப்பதில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. ஷேர் டாக்சி முறையையே அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் நகர்ப்புற நெரிசலுக்கு தீர்வு காண தனியார் வாகனங்களைில் ஷேர் டாக்சி முறையை அனுமதிக்கப்படுகிறது" என்றார்.