மேலும் அறிய

"ஆதாரங்களை வழங்கிவிட்டோம்" நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு.. கனடா மீண்டும் குற்றச்சாட்டு

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய கனட உறவில் விரிசல்:

கனட பிரதமரின் குற்றச்சாட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கனட அரசு தெரிவித்தது. ஆனால், இது தொடர்பான ஆதாரங்களை தங்களிடம் வழங்கவில்லை என இந்தியா கூறி வருகிறது. 

இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் தொடர் இருப்பதற்கான ஆதாரத்தை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவிடம் கனட பகிர்ந்துவிட்டதாக கனட பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனட தலைநகர் ஒட்டாவாவில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

கனட பிரதமர் மீண்டும் குற்றச்சாட்டு:

இதில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, "திங்களன்று நான் பேசிய நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது. நாங்கள் அதை பல வாரங்களுக்கு பகிர்ந்துவிட்டோம். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட நாங்கள் விரும்புகிறோம். இந்த சீரியசான பிரச்னையின் அடிப்படை கூறை ஆராய அவர்கள் (இந்தியா) எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக விசாரணை நடத்தி வரும் கனடா, சென்போன் சிக்னல் மூலமாகவும் பல நபர்களின் மூலமாகவும் உளவுத்தகவல்களை சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் பரிமாறி கொண்ட தகவல்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கிடைத்த உளவுத்தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்தியா மீது கனட குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த  விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை  தங்கள் நாட்டில் இருந்து கனடா வெளியேற்றியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் ஒருவரை வெளியேற்றியது. கனட நாட்டவருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இந்திய கனட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "பிரதமர் ட்ரூடோ எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget