Breaking LIVE : சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
அ.தி.மு.க. சார்பில் எந்த முடிவு எடுத்தாலும் தன்னிடம் கலந்தாலோசித்தே முடிவு எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறாரா?
அக்டோபர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் பங்கேற்க தமிழக பாஜக சார்பில் அழைப்பு.
தேவர் குருபூஜையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சந்திரசூட்
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

