Breaking News Tamil LIVE: ஏப்ரல் முதல் பாராசிட்டாமல் உள்ளிட்ட 800 மருந்து பொருட்களின் விலை உயர்வு
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 103.67க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு 93.71 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.104.43க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.94.47-க்கு விற்பனையாகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
சென்னையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி இல்லை : காவல்துறை தகவல்
சொமேட்டாவின் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டம் சென்னையில் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும், அதேபோல், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 38, 025 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழ்நாடு மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி : ஏப்ரல் 4 ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கும் எனவும், மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் : அதிமுக வெற்றி
கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான போட்டியில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.