Breaking News LIVE, Aug 13: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு
Breaking News LIVE, Aug 13: சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான அப்டேட்களை உடனடியாக அறிய, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்
LIVE
Background
தமிழ்நாட்டு அரசியலில் அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வரும் 16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதேநாளில் தான், அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது. அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கிடையே, பிணை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள்:
முப்பெரும் விழா தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வரும் 16ஆம் தேதி, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் இன்று அமைச்சரவை கூட்டமும் நடைபெறுகிறது.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாவின் பிறந்தநாள். அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, செப்டம்பர் 17ஆம் தேதி, திராவிட இயக்கங்களின் முன்னோடியான பெரியாரின் பிறந்தநாள்.
கடந்த 1949 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதிதான், திமுக தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும், முப்பெரும் விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திமுக திட்டமிட்டு வருகிறது.
முக்கிய முடிவு எடுக்கப்போகும் ஸ்டாலின்:
அந்த வகையில், திமுகவின் முப்பெரும் விழாவை இந்தாண்டு எங்கு கொண்டாடலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில், அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டும் அதே நாளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
"5000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்!" - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பு
"ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தங்களது பொறுப்பை சிறப்பாகச் செய்துள்ளதால் இந்திய அளவில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது சென்னை ஐஐடி! கிராமப்புற பகுதிகளுக்கும் முறையான, தரமான கல்வி போய் சேர வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக 5000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்!" - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்கள் சந்திப்பு
ஹின்டன்பெர்க் அறிக்கை விவகாரம்; 22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
ஹிண்டன்பெர்க் அறிக்கை விவகாரத்தில் வரும் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
ஹின்டன்பெர்க் அறிக்கை விவகாரம்; 22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
ஹிண்டன்பெர்க் அறிக்கை விவகாரத்தில் வரும் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
டாக்கா கலவரம்; முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு
வங்கதேசத்தில் நடைபெற்ற டாக்கா கலவரத்தில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.