Breaking News LIVE Today: சென்னையில் மண்டலவாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Breaking News Tamil LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் விரைவுச் செய்திகளாக கீழே உள்ள லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டு வந்த பாதிப்பு இன்று 13 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புகள் பொங்கல் பண்டிகையில் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், தமிழக அரசு இன்று புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
சென்னையில் மண்டலவாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் மண்டலவாரியாக பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரியில் இன்று 655 பேருக்கு கொரோனா
COVID19 | Puducherry reports 655 new cases, 0 death and 22 recoveries today; Active cases stand at 2355. Test positivity at 16.51% pic.twitter.com/gdHmjv0M6K
— ANI (@ANI) January 11, 2022
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
இந்தியாவில் ஒரேநாளில் 1,68,063 பேருக்கு கொரோனா உறுதியானது
இந்தியாவில் ஒரேநாளில் 1,68,063 கொரோனா கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரேநாளில் 69,959 பேர் குணமடைந்த நிலையில், 277 பேர் உயிரிழந்தனர்.
ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை
ஊரடங்கு நீடிப்பால் கல்லூரிகளுக்கும் 31ஆம் தேதி வரை விடுமுறை - உயர்க்கல்வித்துறை