மேலும் அறிய
Breaking News LIVE: ஃபார்முலா 4 கார் பந்தயம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- தமிழ்நாட்டிற்கு புதியதாக 2 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- மதுரை – பெங்களூர். சென்னை – நாகர்கோயில் இடையே புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்
- உலகத் தரமான கல்வியைப் பெற பி.எம்.ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் – மத்திய அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
- மத்திய அரசு எந்த கல்விக் கொள்கையை திணித்தாலும் ஏற்கத் தயாராக இல்லை – உயர்கல்வி அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்
- அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் ரூபாய் 900 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து
- சென்னையில் இன்று தொடங்குகிறது ஃபார்முலா 4 கார் பந்தயம் – இரவில் நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- சென்னையில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை – வாகன ஓட்டிகள் அவதி
- திருச்சி என்.ஐ.டி.யில் மாணவியிடம் பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது – மாணவிகள் போராட்டம் வாபஸ்
- பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கிய எம்.எல்.ஏ. முகேஷ் பதவி விலக தொடர்ந்து போராட்டம்
- தூத்துக்குடியில் அமோனியா வாயு கசிவு; தொழிலாளர் பரிதாபமாக உயிரிழப்பு
- பிரேசிலில் எக்ஸ்( ட்விட்டர்) தளத்திற்கு தடை; உண்மை மக்களுக்கு தெரிவதை கண்டு ஆட்சியாளர்கள் அச்சம் – எலான் மஸ்க் ஆவேசம்
- பாரலிம்பிக்கில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் – அவனி லேகரா தங்கம் வென்று அசத்தல்
19:39 PM (IST) • 31 Aug 2024
ஃபார்முலா 4 கார் பந்தயம்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இரவு 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணிக்கு நிறைவடைகிறது.
19:30 PM (IST) • 31 Aug 2024
தூத்துக்குடி: தனியார் வெடி கிடங்கில் திடீர் தீ விபத்தில் 2 பேர் பலி: தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நாசரேத்- குறிப்பாண்குளம் பகுதியிலுள் சிவசக்தி தனியார் வெடி கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு 2 பேர் பலி
சாத்தான்குளம் , ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
Advertisement





















