மேலும் அறிய
Breaking News LIVE 2nd NOV: "இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு – வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறை
- தமிழ்நாட்டில் நேற்று மதுரை, திருப்பூரில் நேற்று பரவலாக கனமழைந வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு
- தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
- தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் கொள்கைகள் குறித்து சீமான் கடும் விமர்சனம்
- மத்திய பிரதேசம் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
- ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை
- காஷ்மீரில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீ; பல ஏக்கர் வனப்பகுதியில் பரவிய தீயால் கடும் சேதம்
- கோவை கவுண்டம்பாளையத்தில் தேயிலை தூள் குடோனில் பயங்கர தீ விபத்து
- அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்ட மோசடி நிறுவனங்களுக்கு ரூபாய் 566 கோடி அபராதம்
- தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை, திருப்பூர். கோவை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
- முத்திரைத் தாள் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
- நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது காங்கிரஸ் – பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு
- தேர்தல் ஆணையம் காங்கிரஸ் தலைவர்களை விமர்சிப்பதை ஏற்க முடியாது; இந்த நிலை நீடித்தால் காங்கிரஸ் மீது சட்ட நடவடிக்கை – காங்கிரஸ் எச்சரிக்கை
- ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முன்னாள் முதலமைச்சருடன் பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்றதால் சர்ச்சை
- தொடர் மழையால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை – ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள்
- மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பாரம்பரிய போர் திருவிழா; பட்டாசுகளால் தாக்கிக் கொண்டதில் 30 பேர் காயம்
- தீபாவளி கொண்டாட்டம்; மதுரையில் கடந்த 3 நாட்களில் 1690 டன் குப்பைகள் அகற்றம் – இரவு பகலாக குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
- நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான பேட்டிங்
13:22 PM (IST) • 02 Nov 2024
"இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள் - துணை முதலமைச்சர் உதயநிதி
"இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்"
- கேரளாவில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் இலக்கிய கலாசார நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை
12:34 PM (IST) • 02 Nov 2024
தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது
மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு பசும்பொன்னில் இருந்து தேவர் தங்க கவசம் கொண்டுவரப்பட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனா ஆகியோர் இணைந்து வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
Load More
Tags :
Tamilnadu Weather INdia News Latest News Live CM MK STALIN TN Rains Update Breaking News LIVE Breaking News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















