Breaking News LIVE: எனது காதுகள் எப்போதும் Negativity-க்கு மூடியிருக்கும் - யுவன்ஷங்கர் ராஜா
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Background
- மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – மத்தி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
- மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டு வருகிறது – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
- கோயிலின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் எப்போதும் துணை நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கோயில் கருவறைக்குள் சமத்துவம் வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நிறைவு – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
- தி.மு.க. அரசு வாக்குக்காக முருகன் மாநாடு நடத்துவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு
- தேனி, பெரியகுளம் அருகே மலைக்கிராமத்திற்கு சாலை இல்லாததால் ரேஷன் அரிசியை கொண்டு செல்ல இயலாத அவலம்
- மயிலாடுதுறை குத்தாலம் அருகே வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு – தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மனிதனின் அக்கறை மற்றும் பேராசைக்கு எதிர்வினையே வயநாடு பேரிடர் – கேரள நீதிமன்றம்
- மகாராஷ்ட்ராவில் இன்று மகளிர் குழுக்களுக்காக நிதி வழங்கும் பிரதமர் மோடி
- டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது
எனது காதுகள் எப்போதும் Negativity-க்கு மூடியிருக்கும். இசை மற்றும் Positivity-க்கு திறந்திருக்கும் - யுவன்ஷங்கர் ராஜா
"எனது காதுகள் எப்போதும் Negativity-க்கு மூடியிருக்கும். இசை மற்றும் Positivity-க்கு திறந்திருக்கும்" : சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அட்வைஸ்
50 மாணவர்களைப் பிடித்து தீவிர விசாரணை
கோவை: கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்.
50 மாணவர்களைப் பிடித்து தீவிர விசாரணை
அண்ணாமலையின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
அண்ணாமலையின் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு.
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு.
தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ₹1000ல் இருந்து ₹1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ₹150ல் இருந்து ₹225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டங்களுக்கு ₹450ல் இருந்து ₹670 ஆக உயர்கிறது புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவிப்பு
பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியது அண்ணா பல்கலை
பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. செய்முறைத் தேர்வுக்கட்டணமும் உயர்ந்துள்ளது.