Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
- மனித குலத்தின் வெற்றி என்பது ஒற்றுமையில்தான் உள்ளது – ஐ.நா.சபையில் பிரதமர் மோடி பேச்சு
- ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி அமெரிக்காவில் நேரில் சந்திப்பு
- லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு – உலக நாடுகள் வேதனை
- மதச்சார்பற்ற, சமதர்ம இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – சீதாராம் யெச்சூரி படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
- வெளிநாட்டுப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் குறித்து குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்
- இலங்கை கடற்படை விவகாரத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்சயப்படும் விவகாரத்தில் 40 எம்.பி.க்கள் எங்கே சென்றனர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
- திருப்பதி லட்டு சர்ச்சை; திண்டுக்கல் நிறுவனத்திற்கு மத்திய தர பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
- லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை; திருப்பதி கோயிலில் மகா சாந்தி ஹோம பூஜை
- பிரபல ரவுடி ஜம்புகேஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் – திருச்சியில் பரபரப்பு
- ஊட்டியில் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு
- கொடைக்கானல் மேல்பகுதியில் நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜர் ஆகாத வழக்கு; சேலம் மாவட்ட ஆட்சியருக்கு வாரண்ட் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான முறைகேடு புகார் மீதான வழக்கு; இன்று நண்பகல் தீர்ப்பளிக்கிறது அந்த மாநில உயர்நீதிமன்றம்
- ஜம்மு காஷ்மீரில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் – 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
இலங்கையின் புதிய அதிபருக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. கடிதம்!
மீனவர்கள் விவகாரம் உள்பட பல பிரச்னைகள் குறித்து இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், "எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மீனவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். மீன்பிடி குக்கிராமங்களில் உள்ள எளிய மக்களின் பொதுச் சொத்து என்பதால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மீன்பிடி கப்பல்களும் அவர்களுடன் விடுவிக்கப்பட வேண்டும்.
அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திரட்டி மீன்பிடி படகுகளை வாங்கியுள்ளனர். எனவே அவை சமூகச் சொத்துக்களாகக் கருதப்பட்டு அப்படியே திருப்பித் தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் : ஊக்கத்தொகையாக மொத்தம் 90 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.09.2024) முகாம் அலுவலகத்தில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்த்தில் இம்மாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் திரு. குகேஷ், திரு. பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி மற்றும் அணியின் தலைவரான திரு. ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் 90 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.
Jayam Ravi Police Complaint : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
நடிகர் ஜெயம் ரவி, சென்னை ஈசிஆர் வீட்டில் இருக்கும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத்தரவேண்டும் என ர போலீஸில் புகார் அளித்துள்ளார்
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விவாகரத்து விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், ரவி இப்படியான புகாரை மனைவி ஆர்த்தி மீது அளித்திருப்பது இவ்விஷயத்தில் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
சென்னையில் ஆயிரம் விளக்கு, வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
பாய் மற்றும் தலையணையுடன் வந்து நூதன முறையில் மேயரிடம் மனு அளித்த பொதுமக்கள்
நெல்லை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தி வரும் பாதாளச் சாக்கடை திட்டம் மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் கூறி, ஒப்பந்ததாரர்கள் தூங்கி விட்டார்கள் என்பதை நினைவுபடுத்தும் விதமாக பாய் மற்றும் தலையணையுடன் வந்து நூதன முறையில் மேயரிடம் மனு அளித்த பொதுமக்கள்