மேலும் அறிய
Breaking News LIVE 24th OCT 2024: மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை – பரிசுப் பொருட்கள், பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்
- அரசு அலுவலங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவு பணம் பறிமுதல்
- ராணிப்பேட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல்
- முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை 15 மணி நேர சோதனை
- அமலாக்கத்துறை தனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
- அமலாக்கத்துறையின் சோதனையை கண்டித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கார்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு
- நாடாளுமன்ற கணக்கு குழு முன்பு செபி தலைவர் மாதவி புச் இன்று விளக்கம்
- ராமநாதபுரம், ஈரோடு, தஞ்சை. தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை; தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு
- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டாணா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது – நாளை அதிகாலை ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும்
- புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை முதல் நாளை இரவு வரை மூடல்
- டாணா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் 200 ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வெற்றி கொள்கை திருவிழா எனறு பெயர் – தீவிரமாக நடக்கும் மாநாட்டு பணிகள்
- த.வெ.க. அரசியல் மாநாட்டு பந்தலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் படங்கள்
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு
- 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி – பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே நடந்த சந்திப்பில் முக்கிய பேச்சுவார்த்தை
- மகாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தல்; மகாவிகாஸ் கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ்தாக்கரே கட்சிக்கு 85 இடங்கள் ஒதுக்கீடு
- சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜார்க்கண்டைச் சேர்ந்த காய்கறி வியாபாரி – கைது செய்த போலீஸ்
- இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் தொடக்கம்
21:18 PM (IST) • 24 Oct 2024
மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்
மதுரையில் கனமழையால், தரையிறங்க முடியாமல் 2 இண்டிகோ விமானங்கள் வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
17:40 PM (IST) • 24 Oct 2024
கொடைக்கானலில் நிலச்சரிவு
கொடைக்கானலில் நேற்று பெய்த மழை காரணமாக அடுக்கம், பெரியகுளம் செல்லக்கூடிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2வது நாளாக போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து, சாலையில் குவிந்த ராட்சத பாறைகளை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
Advertisement





















