மேலும் அறிய
Breaking News LIVE 23rd OCT 2024: யூ டியூபர் இர்பான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் பார்க்கத் தடை - சுகாதாரத்துறை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்
- திருப்பூர், ஈரோடு மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை - சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
- கனமழை எதிரொலி; கோவை, திருப்பூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விடாமல் பெய்த கனமழை; திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையில் விழுந்த ராட்சத பாறை
- வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று டாணா புயலாக மாறுகிறது
- டாணா புயல் காரணமாக ஒடிசாவில் 14 மாவட்டங்களில் வரும் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
- டாணா புயல் அச்சுறுத்தல்; மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர்
- கோவை, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி – சீன அதிபர் இன்று சந்திப்பு
- ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியா முழு ஆதரவு வழங்கத் தயார் – அதிபர் புதினிடம் உறுதியளித்த பிரதமர் மோடி
- கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல்
- வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு
- ரூபாய் 400 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு குற்றச்சாட்டு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுப்பு
- அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தவறான தகவல் பரப்பியதாக கூறி மானநஷ்ட வழக்கு தொடுக்கப்படும் – தனியார் நிறுவனம்
- கடந்த 1 வாரத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் – ரூபாய் 500 கோடி வரை இழப்பு
- திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக உத்தரவு
- ரேசன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பாமல் பொய் கணக்கு எகுழுதி கோடிக்கணக்கில் ஊழல் – நியாய விலைக்கடை பணியாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
- திருச்சியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனை
- தீபாவளிக்காக தென்மாவட்டங்களுக்கு விடுக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு
18:48 PM (IST) • 23 Oct 2024
யூ டியூபர் இர்பான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் பார்க்கத் தடை - சுகாதாரத்துறை
மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூபர் இர்பான் காட்டிய விவகாரத்தில், அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் பார்க்கத் தடை விதித்துள்ளது.
18:43 PM (IST) • 23 Oct 2024
பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது
ரஷியாவின் கஸான் நகரில் நடந்துவரும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் இரு தரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















