Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

Background
8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) போட்டிக்கான புள்ளிப்பட்டியல் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது இந்திய அணி
பேட்மிட்டன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ் ...
சென்னையில் - தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம் அரங்கத்தில் தேசிய அளவில் நடைபெறும் 36-வது SUB - JUNIOR BADMINTON CHAMPIONSHIP - 2024 போட்டியை துவக்கி வைத்து, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து
"துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்திருக்காது" : மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு
"திமுக இல்லை என்றால் இந்தியாவில் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்திருக்காது" - சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் கவலை
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் கவலை
திருவண்ணாமலை: ஆரணி அருகே கொருக்கதூர், நாவல்பாக்கம், பிலாந்தி, மணலவாடி, வண்ணாந்தாங்கல், தேவநத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றுக்கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாய் உடைந்து, 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் நாசமாகின.
ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக சீமான் சொன்னது உண்மையில்லை
ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக சீமான் சொன்ன பொய் கதை!@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/Ho7ffKIS2R
— TN Fact Check (@tn_factcheck) October 18, 2024