Breaking LIVE :அதிமுக பொதுக்குழு - புதிய வழக்கை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE

Background
புதிய வழக்கை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரும் புதிய வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சி.பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிப்பால் பதற்றம்- இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறும் வானகரத்தில் அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிக்கப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பேனர்களை கிழித்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு
அதிமுக பொதுக்குழு வழக்கு- சற்று நேரத்தில் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இடைக்கால உத்தரவுக்காக, வழக்கை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். உத்தரவு தயாரான பிறகு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
கட்சி விதிகளில் திருத்தம் வேண்டாம் என்கிறார்கள்- நீதிபதிகள்
அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம், ஆனால் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய கூடாது என மனுதாரர்கள் வாதிட்டனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரிதான் - ஓபிஎஸ் தரப்பு
பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரிதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான், பொதுக்குழுவில் முடிவு எடுக்க முடியும். ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் வைக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

