"இன்னொரு பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தல்” தீரமுடன் இந்திய ராணுவம் அதிரடி..!

இந்தியாவின் பதான்கோட் பகுதியை தாக்க வந்த பாகிஸ்தானின் மற்றொரு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப் படை. தொடர்ந்து இந்திய பகுதியை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தபோதும் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் தீரமிகு எதிர்ப்பால் ஒரு இடத்தில் கூட அவர்களால் தாக்குதல் நடத்த முடியவில்லை. மாறாக, வரும் பாகிஸ்தானின் விமானங்கள் எல்லாம் இந்திய மண்ணிற்கு இரையாகி வருகின்றன.
ஏற்கனவே மூன்று விமானங்களை இந்திய படைகள் சுக்கு நூறாக்கிய நிலையில், ஒரு பாகிஸ்தானின் விமானியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் திமிரிக்கொண்டிருக்கும் பாகிஸ்தானின் ராணுவம் அடுத்தடுத்து விமானங்களை இந்திய எல்லைக்குள் ஏவி வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் இந்திய படைகள் அசால்டாக சுட்டு வீழ்த்திக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் மண்ணில் இந்திய ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)






















