Ten pin bowling | வைரல் ஹிட்ஸை அள்ளும் பின் பவுலிங் : இணையத்தை கலக்கும் சூப்பர் பாட்டி
ஒரே ஸ்ட்ரைக்கில் அத்தனை பின்களையும் வீழ்த்திவிடுகிறார் பாட்டி. பின்னர் ஒன்றும் தெரியாதவர்போல, தனது முகக்கவசத்தை சரிசெய்துகொண்டு திரும்புகிறார்.
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லை, ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற செய்திகள் பகிரப்பட்டு, சமூக வலைத்தளங்களே நம்பிக்கை இழந்த கூடமாக மாறிவிட்டது. ஆனாலும் அவ்வபோது வெளியாகும் சில செய்திகள் மனதிற்கு நம்பிக்கை அளிக்கவும் தவறுவதில்ல . அப்படி ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ நெட்டிசன்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க வாழ் தமிழரான சுதர்ஷன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாட்டி "டென் பின் பவுலிங் (Ten-pin bowling)" விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அந்த பாட்டி புடவை அணிந்துக்கொண்டு பந்தினை லாவகமாக வீசுகிறார். ஒரே ஸ்ட்ரைக்கில் அத்தனை பின்களையும் வீழ்த்திவிடுகிறார் பாட்டி. பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல , தனது முகக்கவசத்தை சரிசெய்துக்கொண்டு திரும்புகிறார்.
வீடியோவை பகிர்ந்த அந்த நபர் " ஹாய் டிவிட்டர் ! என் புடவை அணிந்த பாட்டியின் பவுலிங் ஸ்ட்ரைஸை பாராட்டுங்களேன்! அவர் முகக்கவசத்தையும் சரியாக அணியவும் தவறவில்லை #QueenShit" என குறிப்பிட்டுள்ளார். QueenShit பெண்களின் செயல்களை பெருமைப்படுத்த பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இது வெளியான 24 மணி நேரத்தில் 9,484 ரீட்வீடுகளை பெற்றுள்ளது. மேலும் பலரும் இந்த பாட்டியின் வீடியோக்களை பகிர்ந்து , பாட்டியை பாராட்டி வருகின்றனர்.
Hi Twitter, please appreciate my grandma bowling a strike in her saree, and then proceeding to ensure her mask covers her nose#QueenShit, if you ask me! 👸🏽 pic.twitter.com/T3g4x5dpbk
— Sudarshan Krishnamurthy (@sudkrish) May 17, 2021
நாடுமுழுவதும் கொரோனா குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு நாள் விடியலிலும் நம்மை சுற்றியிருக்கும் நட்பு வட்டத்தில் யாரோ ஒருவரை இழந்து விட்ட செய்திகளை சேர்த்தவாறு உள்ளன. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2.5 லட்சம் அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது நிலைமையின் சவாலை எடுத்துரைப்பதாக உள்ளது. சமூக வலைத்தளங்கள் முழுதும் எதிர்மறையாகிப்போன சூழலில் இந்த சூப்பர் பாட்டி போன்றோரின் வீடியோ சற்று இளைப்பாறிவிட்டு பயணிக்கும் களமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை