மேலும் அறிய

Rahul Gandhi Shirt : ஹேய்..பயமா...பிரச்னைய பேசுங்க...உடை குறித்து கேள்வி எழுப்பிய பாஜகவுக்கு காங்கிரஸ் நச் பதில்

ராகுல் காந்தி, நடை பயணத்தில் பங்கேற்கும் போது அணிந்திருந்த டி- சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி பாஜக விமர்சனம் மேற்கொண்டுள்ளது. 

இந்திய ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கியுள்ள ராகுல் காந்தியை கேலி செய்துள்ளது பாஜக. ராகுல் காந்தி, நடை பயணத்தில் பங்கேற்கும் போது அணிந்திருந்த டி- சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி பாஜக விமர்சனம் மேற்கொண்டுள்ளது. 

இருப்பினும், ராகுல் காந்திக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல், தனது ஆடைகளுக்குப் பணம் செலுத்த அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் யாத்திரையால் பாஜக அரண்டு போய் இருப்பதாகவும் காங்கிரஸ் தெரவித்துள்ளது.

ராகுல் காந்தி மற்றும் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் விலையைக் குறிப்பிடும் வகையில் இரண்டு புகைபடங்களை பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. புளூபெர்ரி டி-ஷர்ட்டின் விலை ₹41,257 என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவுக்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ், "ஏய்... பயமா? இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து. பிரச்னை பற்றி பேசுங்கள். வேலையின்மை மற்றும் பணவீக்கம் பற்றி பேசுங்கள். நாம் ஆடைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால், மோடி அணிந்திருக்கும் 10 லட்சம் ரூபாய் உடை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடிகள் பற்றி விவாதிக்க வேண்டும். பாஜக இதைப் பற்றி விவாதிக்க விரும்புகிறதா?" என பதிலடி அளித்துள்ளது.

 

“ராகுலின் ஆடைகளின் விலை எப்படிக் காட்டப்பட்டதோ, அதே போன்று மோடியின் ஆடைகளின் விலையையும் காட்ட வேண்டும். ஏனென்றால், ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் மக்களவை எம்.பி.க்கள். காந்தியின் விலையை நீங்கள் வெளியிடும்போது, ​​​​மோடிக்கு ஏன் வெளியிடப்படவில்லை? ” என பயனர் ஒருவர் இந்தியில் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட் சூட்டை பிரதமர் மோடி அணிந்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, அணிந்திருந்த கோட் சூட்டின் ஒவ்வொரு பட்டையிலும் அவரது பெயர் எழுதப்பட்டிருந்தது. என்.ஆர்.ஐ-யும் தொழிலதிபருமான ரமேஷ்குமார் பிகாபாய் விரானி என்பவரிடமிருந்து மோடி இந்த உடையை பரிசாக பெற்றதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Embed widget