மேலும் அறிய

மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் – இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி! அண்ணாமலை காட்டம்!

பல்ஹாம் தாக்குதலுக்கு நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பல்ஹாம் தாக்குதலுக்கு நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகல் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். பிரதமர் மூன்றாவது முறையாக பதவியேற்றபோது அன்றைக்கே காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான் இந்தியாவில் அமைதியை கெடுக்க நினைக்கிறது. அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கிறது. இதனால் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் நான் இது பேச வேண்டிய தலைப்பு இல்லை. இருந்தாலும் பேசுறேன். மொத்தமாக பார்த்தால் காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இந்த துர்திஷ்டமான நிகழ்வில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான பதிலடியை கொடுப்பாங்க.

இதில் நம் தலைவர்கள் எல்லோரும் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கணவரை இழந்த சகோதரி சொல்கிறார். அவர் அந்த தீவிரவாதியிடம் என் கணவரை கொன்னுட்ட, என்னையும் என் குழந்தையும் கொன்று விடுங்கள் என முறையிட்டுள்ளார். அதற்கு அந்த தீவிரவாதி மோடியிடம் போய் சொல் என சொன்னதாக கூறுகிறார். அதேபோல் குரான் பற்றி சொல்லவில்லை என்றால் சுடுகிறார்களாம்.

இந்த நேரத்தில் நான் சொல்லவருவது என்னெவென்றால் அங்கு பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வந்தவர்களும் அங்கிருக்கும் இஸ்லாமியர்கள்தான். நமக்குள் இந்து – முஸ்லீம் சமம் தான். நமக்குள் வேற்றுமை இல்லை என்பதை சொன்னாலும் கூட தீவிரவாதிகளின் மனநிலையை சொல்கிறேன். அவன் மதத்தின் அடிப்படையில் தான் தீவிரவாதம் செய்கிறார். அதைத்தான் சொல்கிறேன்.

நிச்சயமாக தீவிரவாதத்தை தீவிரவாதமாகத்தான் பார்க்கிறோம். அரசு இயந்திரங்கள் நிச்சயமாக இதற்கு பதிலடி கொடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.  

தலைப்பு செய்திகள்

உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா? உடனே சரிபார்ப்பது எப்படி?
உங்கள் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா? உடனே சரிபார்ப்பது எப்படி?
Viral Video: வெள்ளத்தில் குட்டி யானை.. கலங்கிய தாய்.. போராடி மீட்ட மீனவர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ!
Viral Video: வெள்ளத்தில் குட்டி யானை.. கலங்கிய தாய்.. போராடி மீட்ட மீனவர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ!
Bank Strike : செப்டம்பர் 26 முதல் 5 நாள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் - வெளியான அறிவிப்பு
செப்டம்பர் 26 முதல் 5 நாள் வங்கிகள் தொடர்ந்து இயங்காது.! வாடிக்கையாளர்களுக்கு ஷாக் - வெளியான அறிவிப்பு
Elavenil Valarivan : ‘இந்தியாவிற்கு வெள்ளி – தமிழ்நாட்டின் தங்கம்’ யார் இந்த இளவேனில் வாலறிவன்..?
‘இந்தியாவிற்கு வெள்ளி – தமிழ்நாட்டின் தங்கம்’ யார் இந்த இளவேனில் வாலறிவன்..?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
ரோட்ல சும்மா ஜம்முனு போனுமா?அறிமுகமாகியது Honda CB 500 பைக்
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Embed widget