மேலும் அறிய

Bihar Caste Census: பீகாரில் 40 பெண்களுக்கு ஒரே கணவர்.. சாதிவாரி கணக்கெடுப்புக்கு சென்ற அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..

பீகாரில்  சாதிவாரி கணக்கெடுப்பின்போது 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணவர் பெயர் ரூப்சந்த் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு 

பொதுவாக அரசு ஆவணங்களில் பல நேரங்களில் ஏற்படும் குளறுபடிகளால் புகைப்படம், பாலினம், வயது, பெயர், கணவர் அல்லது அப்பாவின் உறவுமுறை என அனைத்து அடையாளங்களும் மாறிவிடும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேசமயம் நேரடி ஆய்வுக்கு வரும்போது அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் போலியான அடையாளங்களும் வெளிவருவது உண்டு. இப்படியான நிலையில் பீகாரில் 40 பெண்கள் தங்கள் கணவரின் பெயர் என ஒரே பெயரை கொடுத்துள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. 

நாட்டிலேயே முதல்முறையாக பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மக்களின் பொருளாதார, சமூக பின்னணிகளுக்கு ஏற்ப வளர்ச்சி திட்டங்களை வகுக்க முடியும் என்ற அடிப்படையில் அரசு முழுவீச்சில் இந்த திட்டத்தை கையிலெடுத்து வருகிறது. இதற்காக மாநில பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 17 பிரிவுகளின் கீழ் இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் அர்வால் நகர சபை பகுதியின் வார்டு எண் 7ல் நடந்துள்ளது. இந்த பகுதியில் சிகப்பு விளக்கு எனப்படும் விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வரும் நிலையில், அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது 40 பெண்கள் தங்கள் பெயரை ரூப்சந்த் என பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. இதேபோல் சில குழந்தைகளும் தங்கள் அப்பா பெயரை ரூப்சந்த் என பதிவு செய்துள்ளனர். இது மாநில மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

யார் இந்த ரூப்சந்த்? 

இங்கு வசிக்கும் பெண்களை பொறுத்தவரை ரூப்சந்த் என்பது ஒரு ஆண் இல்லை.  பணத்தை தான் ரூப்சந்த் என அழைக்கின்றனர். அதனைத் தான் தங்களுடைய எல்லாமுமாக பெண்களும், குழந்தைகளும் கருதுகின்றனர். அதனால் தான் ரூப் சந்த் பெயரை கூறுகிறார். இந்த பகுதியில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த பலர் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: PTR Clarifies : ஆடியோவில் உள்ள குரல் யாருடையது..? தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு

2025 நீட் தேர்வு யாருக்கெல்லாம்? என்டிஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி

Greeshma Case: தூக்கு தண்டனை! காதலனை கொன்ற கிரீஷ்மாவின் ரியாக்ஷன் என்ன? ஷரோனின் தாய் கண்ணீர்!

ABP Premium

வீடியோ

Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
TVK Vijay Speech: புதிய விமான நிலையம்.. “பரந்தூர் தான் சரியான இடம்”, மக்களிடையே தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
2025 நீட் தேர்வு யாருக்கெல்லாம்? என்டிஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2025 நீட் தேர்வு யாருக்கெல்லாம்? என்டிஏ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி
Greeshma Case: தூக்கு தண்டனை! காதலனை கொன்ற கிரீஷ்மாவின் ரியாக்ஷன் என்ன? ஷரோனின் தாய் கண்ணீர்!
Greeshma Case: தூக்கு தண்டனை! காதலனை கொன்ற கிரீஷ்மாவின் ரியாக்ஷன் என்ன? ஷரோனின் தாய் கண்ணீர்!
Tirupati:பெருமாளே! திருப்பதி கோயிலுக்கு 6 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த சென்னை பக்தர்!

Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

தமிழக அரசை வழி நடத்துவது சட்டமா? இல்ல சாதியா ? -  கூட்டணியில் புகைச்சலை கிளப்பிய விசிக

HMPV வைரஸ் தடுக்க இதை செய்தால் போதும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Embed widget