மேலும் அறிய

SC oN Baba Ramdev: ”நாங்க ஒன்னும் குருடு இல்லை” - பாபா ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம்

SC oN Baba Ramdev: ராம்தேவ் தனது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்ததாக, உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

SC oN Baba Ramdev: பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க, உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராம்தேவின் மன்னிப்பை நிராகரித்த உச்சநிதிமன்றம்:

நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில், பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் மன்னிப்பு கோரி பிரமாணபத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், அதில் திருப்தி இல்லை என நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. நாங்கள் குருடர்கள் அல்ல,  இந்த வழக்கில் தாராளமாக இருக்க விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மன்னிப்பு என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது.  இதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம், இது வேண்டுமென்றே உறுதிமொழி மீறலாக நாங்கள் கருதுகிறோம். நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்பு பிரமாணப் பத்திரங்கள் பொதுவெளியில் வெளியிட்டதற்கு ஆட்சேபனையும் தெரிவித்தனர்.

பப்ளிசிட்டிக்காகவா?..

நேற்று மாலை 7.30 மணி வரையில் அந்த பிரமாணபத்திரம் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆனால், அதற்கு முன்னதாகவே அவை ஊடகங்களுக்கு சென்றன. பப்ளிசிட்டிக்காகவே அவர்கள் இந்த மன்னிப்பை கோரியுள்ளனர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பிரமாணப் பத்திரத்தில் மோசடி செய்கிறீர்கள். அதை யார் தயாரித்தது என்பதில் ஆச்சரியமாக இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தர். அது ஒரு சிறிய தவறு என பதஞ்சலி தரப்பு கூற, அது ”மிகச் சிறிய வார்த்தை” என நிதிபதிகள் சாடினர். மேலும், “ விளம்பரங்களை திரும்பப் பெறுங்கள் என மாநில அரசு வலியுறுத்திய போது, உங்களது பதில்களை பாருங்கள். எங்களுக்கு எதிராக எந்த வற்புறுத்தல் நடவடிக்கையும் இல்லை என உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளதாக பதிலளித்துள்ளீர்கள். இது உங்களது நடத்தையாக எங்களால் கருதப்படுகிறது” என வும் நீதிபதிகள் தெரிவித்தனர்.   

உத்தராகண்ட் அரசுக்கு கண்டனம்:

ஆயுர்வேத மருந்துகளை உலகில் முதன்முதலில் கொண்டு வந்தவர்கள் என்பது போல் மக்களை ஆயுர்வேத மருந்துகளுடன் இணைப்பதே விளம்பரத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறுகிறார்கள். உச்சநீதிமன்றம் இப்போது கேலிக்கூத்தாக மாறிவிட்டது என நீதிபதிகள் ஆவேசமாக பேசினர். சட்டத்தை மீறியதற்காக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என,  உத்தரகாண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதிலில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்தனர். உத்தராகண்ட் மாநிலத்தை விடுவிக்க போவதில்லை.  என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து புகார்களும் அரசுக்கு அனுப்பப்பட்டன. உரிமம் வழங்கும் ஆய்வாளர் அமைதியாக இருந்தார், அதிகாரிகளின் உரிய அறிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Embed widget