நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்... என்னென்ன துறைகள் இயங்கும்.. இயங்காது! முழு விவரம்
வங்கித்துறை முதல் கட்டுமானம் வரையிலான துறையை சேர்ந்த 2025 கோடிக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்ததில் ஈடுப்பட உள்ளனர்

வங்கித்துறை முதல் கட்டுமானம் வரையிலான துறையை சேர்ந்த 2025 கோடிக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்ததில் ஈடுப்பட உள்ள நிலையில் இதன் காரணமாக எந்தெந்த துறையின் சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதை காண்போம்.
நாளை பாரத் பந்த்:
அரசின் தொழிலாளர் விரோதம், விவசாயி விரோதம் மற்றும் பெருநிறுவன ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக, 10 முக்கிய மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பில் உள்ள அமைப்புகள் இணைந்துநாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு — ‘பாரத் பந்த்’ — அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முறைசாரா மற்றும் அமைப்புசாரா தொழில் துறைகள் உட்பட, அனைத்து பொருளாதார துறைகளிலும் தொழிற்சங்கங்கள் தீவிரமாக வேலைநிறுத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சேவைகள் பாதிக்கும்?
1. வங்கி சேவைகள்
2. அஞ்சல் சேவைகள்
3. நிலக்கரிச் சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகள்
4. மாநில போக்குவரத்து சேவைகள்
5. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள்
என்னென்ன இயங்கும்?
1. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
2. தனியார் அலுவலகங்கள்
இதன் காரணமாக வங்கி சேவை, அஞ்சல் சேவை, மாநில போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகள் பாதிக்கபடலாம் என்று சொல்லப்படுகிறது.
வேலை நிறுத்தம் எதற்கு?
அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக வருடாந்திர தொழிலாளர் மாநாட்டை நடத்தவில்லை என்றும், தொழிலாளர் நலனுக்கு முரணான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருவதாகவும், கூட்டு பேரத்தை பலவீனப்படுத்தவும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை முடக்கவும், 'வணிகம் செய்வதை எளிதாக்குதல்' என்ற பெயரில் முதலாளிகளுக்கு சாதகமாகவும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொருளாதாரக் கொள்கைகள் வேலையின்மை அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊதிய உயர்வு, கல்வி, சுகாதாரம், அடிப்படை குடிமை வசதிகள் ஆகியவற்றில் சமூகத் துறை செலவினங்களைக் குறைத்தல் போன்றவற்றுக்கு வழிவகுப்பதாகவும், இவை அனைத்தும் ஏழைகள், குறைந்த வருமானக் குழு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் துயரங்களுக்கு இட்டுச் செல்கின்றன என்றும் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசுத் துறைகளில், இளைஞர்களுக்கு வழக்கமான நியமனங்களை வழங்குவதற்குப் பதிலாக, ஓய்வு பெற்றவர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கை, ரயில்வே, என்எம்டிசி லிமிடெட், ஸ்டீல் நிறுவனம் மற்றும் ஆசிரியர் பணிகளில் காணப்படுவது போல், நாட்டின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாகவும், 65 சதவீத மக்கள் தொகை 35 வயதுக்குட்பட்டவர்களாகவும், 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களிடையே வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதாகவும் அந்த தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளது.






















