காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
சோப் மீது கால் வைத்ததால், வழுக்கிவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் கோமா நிலைக்குச் சென்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாடியில் இருந்து விழுந்த பெண்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கனகா நகரில் வசித்து வருபவர் ரூபா. அவர் வசிக்கும் ஆர்.கே.பேலஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் கணவர் உடன் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் கிடந்த சோப் மீது ரூபா கால் வைத்துள்ளார்.
இதனால் கால் வழுக்கி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த அவர், கட்டடத்தின் சுவரை பிடித்தபடி தன்னை காப்பாற்றுமாறு சத்தமிட்டிருக்கிறார். இதனிடையே அவரது கணவர் ரூபாவின் கைகளை பிடித்து கொண்டு அவரை மாடியில் இருந்து மீட்க முயற்சி செய்கிறார்.
Bengaluru Woman Accidentally Steps On #Soap, Falls From #Terrace, Disturbing Footage Goes Viral #DJHalli #bengaluru #Viralvideo pic.twitter.com/vgBk0PbnjB
— Madhuri Adnal (@madhuriadnal) June 22, 2024
மருத்துவமனையில் அனுமதி:
ஆனால் கை நழுவி அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: அச்சச்சோ! ஓடும் வேனில் இருந்து கீழேவிழுந்த பள்ளி மாணவிகள் - பெற்றோர்கள் பேரதிர்ச்சி
மேலும் படிக்க: இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. மத்திய பிரதேசத்தில் பதற்றம்!