Watch Video: பைக் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் மீட்டிங் அட்டன் செய்த நபர் - நீங்களே பாருங்க
Bengaluru Man Riding bike: இரு சக்கர வாகனத்தை இயக்கி கொண்டே மடிக்கணினி மூலம் அலுவலக வேலையை இளைஞர் ஒருவர் பார்த்து கொண்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவிய ஒரு வைரல் வீடியோ, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், இடையிலான நேரங்கள் குறித்தான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
வாகனத்தில் வேலை:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நபர் இரு சக்கர வாகனத்தை இயக்கி கொண்டே லேப்டாப்பில் ஆன்லைன் மீட்டிங்க்-ல் பங்கேற்றதாக கூறப்படுகிறது. சாலை ட்ராபிக்கில் ஸ்கூட்டரையும், லேப்டாப்பையும் ஒரே நேரத்தில் இயக்குவது பேசு பொருளாகியது. அதை வீடியோவாக எடுத்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் கர்நாடக மாநிலம் பெங்களூர் என்றும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரில் பொதுவாகக் காணப்படும் ஒரு காட்சிதான் என்றும் கருத்துகளை சிலர் பதிவிட்டுள்ளனர்.
Bengaluru is not for beginners 😂
— Peak Bengaluru (@peakbengaluru) March 23, 2024
(🎥: @nikil_89) pic.twitter.com/mgtchMDryW
வைரலாகும் வீடியோ:
அந்த வீடியோ காட்சிகளில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திறந்த மடிக்கணினியை தங்கள் மடியில் வைத்து ஆன்லைன் மீட்டிங் பங்கேற்பதை காண முடிந்தது. மைக்ரோசாப்ட் குழுக்கள் சந்திப்பின் உள்ளடக்கங்கள் தெரிகிறது.
ட்விட்டரில் ஒரு பயனர் குறிப்பிடுகையில், "அவர் 70 மணி நேர வேலை வார இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு ஐடி துறையில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் சில நபர்கள், தேவையின் காரணமாக இது போன்ற வழக்கத்திற்கு மாறான முறைகளை நாடுகிறார்கள்," என்றும் பயனர் கருத்து தெரிவித்தார்.
மேலும், இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வீடியோவுக்கு நகைச்சுவையாகவும் அனுதாபத்துடனும் கருத்துக்களை பதிவிட்டனர்.