Watch Video: ஓடும் பேருந்தில் பெண் பயணிக்கு நேர்ந்த கொடூரம்! நடத்துனர் மீது பாய்ந்த நடவடிக்கை - ஷாக் வீடியோ!
பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Watch Video: பெங்களூருவில் பேருந்தில் பயணித்த பெண்ணை, நடத்துனர் ஈவு இரக்கமின்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பயணியை தாக்கி நடத்துனர்:
கர்நாடக மாநிலம் பிலேகல்லி என்ற பகுதியில் இருந்து சிவாஜி நகருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தில் மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணிக்கும், அங்கிருந்த நடத்துனருக்கு டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் பெண் பயணியை, நடத்துனர் பலமுறை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சித்தாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் நடத்துனரை சஸ்பெண்ட் செய்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. நடத்துனர் ஹொன்னப்பா நாகப்பா அகாசர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், "பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பேருந்துகளில் பெண்களுக்கு தனி இருக்கை, தனி கதவுகள், பேனிக் பட்டன் அமைத்தல், சிசிடிவி, தகவல் பலகைகள் அமைத்தல், முக்கிய பேருந்து நிலையங்களில் பெண்கள் ஓய்வு அறை, ஹெல்ப்லைன் போன்ற நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
வைரல் வீடியோ:
Slap-Kalesh b/w a Woman and Conductor inside BMTC bus Bengaluru KA
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 27, 2024
pic.twitter.com/xBWlAxwsO3
மேலும் படிக்க