Bank Holiday: ஜூலை மாதம் பேங்க் போற ப்ளான் இருக்கா? 15 நாட்கள் விடுமுறையாம்.. விடுமுறை பட்டியலை பாத்துட்டு போங்க..
ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Bank Holiday: ஜூலை மாதம் பேங்க் போற ப்ளான் இருக்கா? 15 நாட்கள் விடுமுறையாம்.. விடுமுறை பட்டியலை பாத்துட்டு போங்க.. Banks will be closed for 15 days in the month of July, according to RBI. Bank Holiday: ஜூலை மாதம் பேங்க் போற ப்ளான் இருக்கா? 15 நாட்கள் விடுமுறையாம்.. விடுமுறை பட்டியலை பாத்துட்டு போங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/bce00830a8450e628f0cd2c48ba0bfe01688186281782589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு பல நகரங்களில் வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும். வணிக ரீதியாக வங்கி கிளைகள் மூடப்பட்டாலும், ஆன்லைன் வர்த்தகம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் வரும் விடுமுறை நாட்களில் வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இணைய வழி வங்கி செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கி விடுமுறை என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடுமுறைப் பட்டியலைப் பொறுத்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, வங்கி விடுமுறை நாட்களைப் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளுக்கு ரிசர்வ் வங்கியின் இணையதளத்தைப் பார்ப்பது அவசியம் என கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் மக்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் முதலில் விடுமுறை பட்டியளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் படி ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுமா என்றால் இல்லை. உள்ளூர் விடுமுறை என அனைத்தையும் கணக்கில் கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வழக்கமாக எல்லா மாதத்திலும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செய்லபடும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறையாகும்.
விடுமுறை பட்டியல்:
ஞாயிற்றுகிழமை – ஜூலை 2
குரு ஹர்கோபிந்த் பிறந்தநாள்: ஜம்மு காஷ்மீரில் மட்டும் வங்கிகள் விடுமுறை – ஜூலை 5
MHIP தினத்தை முன்னிட்டு ஏயிஸ்வால் (aizwal) நகரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை – ஜூலை 6
இரண்டாம் சனிக்கிழமை – ஜூலை 8
ஞாயிற்றுகிழமை – ஜூலை 9
கேர் பூஜாவை முன்னிட்டு அகர்டாலாவில் விடுமுறை – ஜூலை 11 ‘
பானு ஜெயந்தியை முன்னிட்டு காங்டாக்கில் வங்கிகள் செயல்படாது – ஜூலை 13
ஞாயிற்றுகிழமை – ஜூலை 16
யு டிரோட் சிங் தினத்தை முன்னிட்டி ஷில்லாங் பகுதியில் வங்கிகளுக்கு விடுமுறை – ஜூலை 17
ட்ருப்கா ஷேஷி (drupka tshezi) முன்னிட்டு காங்டாக் பகுதியில் வங்கிகள் விடுமுறை – ஜூலை 21
நான்காவது சனிக்கிழமை – ஜூலை 22
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)