Omicron Variant: தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா..! முன்னெச்சரிக்கையில் இறங்கிய கர்நாடகா!
Omicron Variant: கர்நாடகா மாநிலத்தில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு தனது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Bengaluru: Karnataka CM Basavaraj Bommai held an emergency meeting today over the new #COVID19 variant #Omicron. Other ministers, including state Health Minister Dr K Sudhakar, officials of state Health Department & other departments attended the meeting.
— ANI (@ANI) November 27, 2021
(Source: CMO) pic.twitter.com/gXxOJg5tAW
தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த இரண்டு இந்தியர்களுக்கு டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 'ஒமைக்ரான்' தொற்று இல்லை எனவும் பெங்களூர் ஊரக மாவட்ட துணை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட தகவல் குறிப்பில், " ‘அதிக பாதிப்பு‘ அபாயமுள்ள நாடுகளிலிருந்து 5வந்த 84 சர்வதேச பயணிகளிடம் விமான நிலையத்தில் சோதனை நடைபெற்றது. இதில், தென்னாப்பிரிக்காவில் வந்த இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, மரபணு வகைப்படுத்தலுக்கு உட்படுத்தியதில், டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது" எனத் தெரிவித்தது.
இதற்கிடையே, புதிய வகை உருமாறிய “ ஒமைக்ரான்“ குறித்தும், கொரோனா ஆயத்தப் பணிகள் குறித்தும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். கர்நாடகா மாநிலத்தில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்கம், ரயில்வே நிலையம், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல இரண்டாம் கட்ட தடுப்பூசி கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Karnataka | 584 pax had come to Bengaluru from 10 high-risk nations. Out of them, 2 who returned from South Africa (Indian nationals) tested positive for COVID on 11 & 20 Nov respectively. We sent it for sequencing & came to know that it's Delta variant: Bangalore Rural Dist DC
— ANI (@ANI) November 27, 2021
தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட புதிய உருமாறிய வைரஸ் வகை ஒமைக்ரான் (B.1.1.529- Beta) தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரபாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த, புதிய டெல்டா வைரஸ் வகைகள் அதிகம் பரவக் கூடியதாகவும், நுரையீரலை பாதிக்கக் கூடியதாகவும், பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பொது சுகாதார கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைப்பதுடன், பல்வேறு பகுதிகளிலும் சமூகப்பரவலை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
பலதரப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் தற்போது சுற்றிக்கொண்டிருக்கின்றன.
இவற்றில், இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வகை( B.1.1.7-Alpha), தென் ஆப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட வைரஸ் வகை (B.1.351- Beta), ஒமைக்ரான் (B.1.1.529) , பிரேசிலில் முதன்முறையாக கண்டறிப்பட்ட கொரோனா வைரஸ் (P.1- gamma), இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617.2- டெல்டா வகை) ஆகிய ஐந்து மாறுபட்ட வைரஸ்கள் மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது.