மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளை தொடங்குகிறது மண்டல பூஜை! பாதுகாப்பு, நேரம் மாற்றம், பக்தர்கள் எதிர்பார்ப்பு!

சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நாளை மறுதினம்(17ம் தேதி முதல்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளை தொடங்குகிறது மண்டல பூஜை! பாதுகாப்பு, நேரம் மாற்றம், பக்தர்கள் எதிர்பார்ப்பு!

சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நாளை மறுதினம்(17ம் தேதி முதல்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படும். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தீபாராதனைக்கு பின்னர் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத்தும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் (17ம் தேதி) முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் இந்த புதிய மேல்சாந்திகள் தான் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றுடன் 41 நாள் மண்டல காலம் நிறைவடையும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடங்கியது. நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை 16 நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளை தொடங்குகிறது மண்டல பூஜை! பாதுகாப்பு, நேரம் மாற்றம், பக்தர்கள் எதிர்பார்ப்பு!

சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் கூறியதாவது, சபரிமலையில் மண்டல காலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. மொத்தம் 6 கட்டங்களாக 18,741 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நிலக்கல், பம்பை, சன்னிதானம் என மூன்று மண்டலங்களாக பிரித்து தலா ஒரு எஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில் டிஐஜிகளான அஜீதா பேகம், சதீஷ் பினோ மற்றும் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்ட எஸ்பிக்களான ஆனந்த், சாபு மேத்யூ, சாகுல் அமீது ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளை தொடங்குகிறது மண்டல பூஜை! பாதுகாப்பு, நேரம் மாற்றம், பக்தர்கள் எதிர்பார்ப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. அன்று முதல் தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு நடை சாத்தப்படும் நேரம் கூட்டப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget