மேலும் அறிய

PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!

PF இணையதளத்தின் Interface மாற்றமடைந்துள்ளது. அதாவது PF இணையதளத்தில் சில வசதிகள் நீக்கப்பட்டு சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கோடிக்கணக்கான PF சந்தாதாரர்களுக்கு  EPFO அமைப்பு ஒரு அதிரடியான மாற்றத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே PF கணக்கு வைத்திருப்பவர்கள், புதிதாக வேலைக்கு சேர்ந்து PF கணக்கு தொடங்கியவர்கள் என அனைவரும் இது குறித்து தெரிந்து வைத்து கொள்வது நல்லது.


PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!

EPFO அமைப்பு தனது ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலை (Unified Member Portal) சமீபத்தில் மேம்படுத்தியது. இதனை அடுத்து PF இணையதளத்தின் Interface மாற்றமடைந்துள்ளது. அதாவது PF இணையதளத்தில் சில வசதிகள் நீக்கப்பட்டு சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் UAN activation மற்றும் புதிய UAN உருவாக்கம் ஆகியவற்றை நேரடியாக EPFO இணையதளத்தில் இனி செய்ய முடியாது. இதுவரை EPFO இணையதளத்தில் செய்யப்பட்டு வந்த UAN ஆக்டிவேஷன் மற்றும் புதிய UAN உருவாக்கம் (Direct UAN Allotment) ஆகிய சேவைகள் இனி EPFO இணையதளத்தில் கிடைக்காது.

அதற்கு மாற்றாக இந்த சேவைகள் தற்போது UMANG செயலிக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே PF சந்தாதாரர்கள் UMANG செயலியை பயன்படுத்தி, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார முறையை பின்பற்றி மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும்.மேலும் EPFO இணையதளத்தில் UAN-ஐ கண்டறியும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் UAN-ஐ கண்டறியலாம்.

பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களின் இறப்பு தொடர்பான கோரிக்கைகளை பழைய முறைப்படியே EPFO இணையதளம் வழியாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள், கோரிக்கைகள் நடைமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. UAN சேவைகள் மட்டும் EPFO இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு UMANG செயலிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது UMANG செயலியில் UAN ஆக்டிவேஷன் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.

· கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து UMANG செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும்

· பின்னர் UMANG செயலியில் EPFO Services என்பதை தேர்ந்தெடுக்கவும்

· இதில் UAN Services Through Face Auth என்ற பகுதிக்குச் சென்று, UAN Activation அல்லது UAN Allotment என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்

· திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆதார் முக அங்கீகாரத்தை நிறைவு செய்யவும்

அவ்வளவு தான் உங்களின் UAN ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். பிஎஃப் சந்தாரர்களுக்கு இன்னும் வேகமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்காகவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முக அங்கீகார முறையை பயன்படுத்துவதன் மூலம் மோசடிகள் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது. இது வந்துவிட்டால் தற்போது போல வார கணக்கில் காத்திருக்காமல் நினைத்த நேரத்தில் யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget