Atishi Singh: டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
![Atishi Singh: டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு Atishi Singh elected as Delhi Chief Minister Arvind Kejriwal proposes AAP Atishi Singh: டெல்லி புதிய முதல்வராக அதிஷி தேர்வு; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/d22801c98b0a90e9000d9faa7353a7e71726554149909489_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமாக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. எனினும் தலைமைச் செயலகம் செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், எந்த கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது.
ராஜினாமா செய்யும் அர்விந்த் கெஜ்ரிவால்
சிறைக்குச் செல்லும்போது கூட முதல்வர் பதவியைத் துறக்காத அர்விந்த் கெஜ்ரிவால், ஜாமினில் வெளியில் வந்தபிறகு, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கட்சி எம்எல்ஏக்கள் கூடி புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வர் என்று அறிவிக்கப்பட்டது.
Delhi CM Arvind Kejriwal proposes the name of Delhi Minister Atishi as the new Chief Minister. She has been elected as the leader of Delhi AAP Legislative Party: AAP Sources pic.twitter.com/65VPmPpA39
— ANI (@ANI) September 17, 2024
இந்த சூழலில், டெல்லியின் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. இந்த கூட்டத்தில், அர்விந்த் கேஜ்ரிவால் அதிஷியின் பெயரை முதலமைச்சராக்க முன்மொழிந்துள்ளார். இதையடுத்து கல்வித்துறை அமைச்சரான அதிஷி சிங், கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 43.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)