Shahrukh Khan : விசாரணை அதிகாரியிடம் ஆர்யன்கான் கேட்ட சுளீர் கேள்வி...ரகசியங்களை போட்டு உடைத்த ஷாருக்கான்
ஆர்யன்கான் சரியாக தூக்குவதில்லை எனவும் இரவு முழுவதும் அவருடன் எவரேனும் ஒருவர் உடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் ஷாருக் கான் கூறியிருந்தார்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மீது போதை மருந்து வழக்கு பதிவு செய்தபோது, தலைமை விசாரணை அதிகாரியிடம் அவர் அழுத்தமான சில கேள்விகளை முன்வைத்தாக விசாரணை அதிகாரி மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, பொதுவெளியில் வெளியான செய்திகளால் ஆர்யன் கானால் இரவில் தூங்க முடியவில்லை என ஷாருக் கான் தெருவித்ததாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
எட்டு மாத காலமாக தாங்கள் அனுபவித்து வந்த அனுபவங்கள் குறித்து ஷாருக் கான் கானின் குடும்பத்தார் இந்தியா டூடே வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளனர். விசாரணையை தலைமை தாங்கி நடத்திய போதை தடுப்பு முகமையின் மூத்த அலுவலர் சஞ்சய் சிங்கிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், சற்றும் எதிர்பாராத கேள்விகளை ஆர்யன் கான் கேட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சிங் விரிவாக பேசுகையில், "திறந்த மனதுடனே விசாரணைக்கு வந்துள்ளதாக நான் ஆர்யன் கானிடம் கூறினேன். அதற்கு அவரோ, என்னை சர்வதேச போதை மருந்து கடத்தல்காரர் போல் வெளி உலகுக்கு காட்டியுள்ளீர்கள். போதை கடத்தலுக்கு நான் பணம் வழங்கியது போல கட்டமைத்து உள்ளீர்கள். இந்த குற்றச்சாட்டுகள் அபத்தம் அல்லவா? என கேள்வி எழுப்பினார்"
அன்று அவர்கள் என்னிடம் எந்த போதைப்பொருளையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்தனர். ஐயா, நீங்கள் எனக்கு பெரிய தவறு செய்து என் புகழை கெடுத்துவிட்டீர்கள். நான் ஏன் இத்தனை வாரங்கள் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று - உண்மையில் நான் அதற்கு தகுதியானவனா? என சுளீர் கேள்வி கேட்டுள்ளார்.
பின்னாட்களில், ஷாருக் கானை சந்தித்தபோது, தனது மகனின் மன நலன் குறித்து கவலை அளிப்பதாக அவர் கூறியதாக விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து இந்தியா டூடே வார இதழில் வெளியான கட்டுரையில், ஆர்யன் கான் சரியாக தூங்கவில்லை என்றும், இரவு முழுவதும் அவருடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஷாருக் கான் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத போதிலும் அவரை வில்லனை போல் சித்தரித்ததாக ஷாருக் கான் கூறியுள்ளார்.
சஞ்சய் சிங்குடன் கண்ணில் கண்ணீருடன் பேசிய ஷாருக் கான், "சமுதாயத்தை அழிக்கும் குற்றவாளிகளை போலவும் அரக்கர்களை போலவும் நாங்கள் சித்தரிக்கப்பட்டோம். அப்போது, ஒவ்வொரு நாளும் கடினமாக இருந்தது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

